Testimonies
Though thy beginning was small, Yet thy latter end should greatly increase – Sis. Punitha
ஆண்டவறுடைய பரிசுத்த நாமத்திற்கு தோஸ்திரம் உண்டாக கடவது. உண்மையாக கர்தரை தேடி அவரை ஏற்றுகொள்பவருக்கு, அவர் சமீபித்திருக்கிறார். அவருடைய கிருபயாலே ஆரம்பிக்கப்பட்ட இம்மானுவேல் சபை. ஒரு நோக்கதிலும், தேவ திட்டத்திலும் இன்று வரை செயல்பட்டு வருகிறது. இம்மானுவேல் சபையிலே தேவ வார்த்தை உண்மையாகவும், வல்லமையாகவும் பிரசங்கிக்க பட்டு வருகின்றது. அந்த வார்த்தைய ஏற்று கொள்கின்றவர்கள் மத்தியில் கர்த்தர் கிரிகைகளை நடத்தி வருகிறார். நானும் இந்த பயணத்தில், ஆரம்ப நாட்களில் இருந்து பிரயாணிக்க, கர்த்தர் உதவி செய்திருக்கிறார்.
கர்த்தருடைய நாமம் உயரவும், அவருடைய மகிமை பரவவும், மனித கண்கள் திறக்கப்பட வேண்டும். அதற்கு கர்த்தரோடு ஒரு உறவை கைகொள்ள வேண்டும்.
யோபு 8:7 உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்
என்னுடைய ஆசீர்வாதமும், வாழ்துதழும் இம்மானுவேல் சபையோடும், அதை நடத்தி வரும் சந்திரன், கரோலின் குடும்பத்தோடும் இருக்கிறது.